Play On Vlc Player, Windows Media Player & SMPlayer : https://listen.openstream.co/3641/audio

»

Monday 15 January 2018

Devaram-தேவாரம்


பண்: வியாழக்குறிஞ்சி
பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.


பண்: நட்டபாடை


தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்

ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த

பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.




பண்: தக்கேசி


பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்க ளெரித்தவன்று மூவர்க் கருள்செய்தார்

தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின் னிரையோடும்

ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணா மலையாரே.




பண்: 


எல்லா உலகமும் ஆனாய்நீயே!
ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே!

நல்லாரை நன்மை அறிவாய் நீயே!

ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் நீயே!

பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே!
புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே!
செல்வாய செல்வம் தருவாய் நீயே!
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ!



பண்: தக்கேசி


பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப் போக மும்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப் பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை

இன்ன தன்மையன் என்றறி வொண்ணா எம்மா னைஎளி வந்தபி ரானை

அன்னம் வைகும் வயற்பழ னத்தணி ஆரூ ரானை மறக்கலு மாமே.




பண்: நட்டராகம்


இமையோர் நாயகனே இறைவாவென் னிடர்த்துணையே
கமையார் கருணையினாய் கருமாமுகில் போல்மிடற்றாய்

உமையோர் கூறுடையாய் உருவேதிருக் காளத்தியுள்

அமைவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.